தினசரி கொரோனா பாதிப்பு 5,443 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்து 443 ஆக உயர்ந்தது. பலியும் 26 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2022-09-22 04:43 GMT

புதுடெல்லி,

நமது நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா இறங்குமுகம் கண்டது. நேற்றை விட இன்று சற்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இன்று இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 443 ஆக உயர்ந்தது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 453 ஆயிரத்து 042 ஆக உயர்ந்தது.

நேற்று நாடு முழுவதும் 5 ஆயிரத்து 291 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர். இதுவரை இந்த தொற்றில் இருந்து மீட்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 78 ஆயிரத்து 271 ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 46,216 லிருந்து 46,342 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,429 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2,17,11,36,934 ஆகும். இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் காலையில் வெளியிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்