இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-29 06:33 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் பிஎப்7 வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறத்தொடங்கியுள்ளது. தினசரி பதிப்பு 200 க்கும் கீழாக பதிவாக வந்த கொரோனா பாதிப்பு இந்த வர தொடக்கத்தில் மீண்டும் 200 ஐ தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3552- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்