இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 53 பேர் பலி - பின்னணி என்ன?

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 53 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Update: 2022-11-01 21:56 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நமது நாட்டில் நேற்று முன்தினம் கொரோனாவால் 8 பேர் இறந்தனர். ஆனால் தொற்றால் நேற்று ஒரு நாளில் 53 பேர் பலியானதாக பதிவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், கோவா. அங்கு விடுபட்ட கொரோனா பலிகளில் 46-ஐ கணக்கில் கொண்டு வந்தனர்.

கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 3-ஐ கணக்கில் சேர்த்தனர். மற்றபடி டெல்லி, அரியானா, கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதுவரை இந்த தொற்றால் 5 லட்சத்து 29 ஆயிரத்து 77 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 126 மாதிரிகளை சோதித்துள்ளனர். நேற்று முன்தினம் 1,326 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று இந்த எண்ணிக்கை 1,046 ஆக குறைந்தது. நேற்று தொற்றில் இருந்து 1,287 பேர் குணம் அடைந்தனர்.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 294 குறைந்தது. இதன்காரணமாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 618 ஆக குறைந்தது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்