இந்தியாவில் மேலும் 290 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 6 பேர் பலி

கொரோனாவுக்கு கேரளாவில் 4 பேர், மராட்டியம் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என 6 பேர் பலியானார்கள்.

Update: 2024-01-21 23:00 GMT

புதுடெல்லி,

கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது.

இந்தியாவில் நேற்று 290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 23 ஆயிரத்து 751 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவில் இருந்து 4 கோடியே 44 லட்சத்து 88 ஆயிரத்து 258 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 41-ல் இருந்து 2 ஆயிரத்து 59 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு கேரளாவில் 4 பேர், மராட்டியம் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என 6 பேர் பலியானார்கள். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 434 ஆக அதிகரித்தது

Tags:    

மேலும் செய்திகள்