இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை : மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை விளக்கமளித்துள்ளது.
புதுடெல்லி,
கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது,எனவும் இதன் காரணமாக இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டிமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இதற்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது..
அதன்படி இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கோதுமை கையிருப்பு நாட்டில் உள்ளது இந்திய உணவுக் கழகம் பொது விநியோகத்திற்கான போதுமான இருப்பைக் கொண்டுள்ளது:என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை விளக்கமளித்துள்ளது.