இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2022-11-12 00:51 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

அமெரிக்கா- இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

தற்போதைய உலகப் பொருளாதார வளர்ச்சி நிலை சவாலானதாகவே உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் தனிமைப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதையின் முக்கிய அங்கமாக வெளிநாட்டு மூலதனத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

இதற்காக முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். வெளிநாட்டு முதலீட்டாளருக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், மொத்த வெளிநாட்டு முதலீட்டு வரம்பு அதிகரிப்பு, பொதுவான விண்ணப்பப் படிவத்தை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகளின் வெற்றி, இந்தியாவில் தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது, அண்மையில் இங்கிலாந்தை தாண்டி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது.

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் உலகின் பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்