யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வு!

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-07 16:54 GMT

புதுடெல்லி,

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2022-2026 சுழற்சிக்கான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான 'யுனெஸ்கோ- 2003 மாநாட்டில் உள்ள அரசுகளுக்கிடையேயான குழுவின்' உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் 9வது பொதுச் சபையின் போது, 2022 ஜூலை 5 முதல் 7 வரை பாரிஸ் நகரில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் அரசுகளுக்கிடையேயான குழுவிற்கான இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டன.

இதனை மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு துறை மந்திரி ஜி. கிஷன் ரெட்டி இன்று தெரிவித்தார்.

இந்தியா, வங்காளதேசம், வியட்நாம், கம்போடியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஆசிய-பசிபிக் குழுவிற்குள் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு ஆறு நாடுகள் தங்கள் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளன. அதில் வாக்களிக்கும் உரிமையுள்ள 155 நாடுகளிடமிருந்து இந்தியா 110 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கடந்த காலத்தில், இந்த மாநாட்டின் அரசுகளுக்கிடையேயான குழுவில் 2006 முதல் 2010 வரை மற்றொன்று 2014 முதல் 2018 வரைyஇலான காலகட்டங்களில் இந்தியா இரண்டு முறை உறுப்பினராக இருந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்