இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - தலாய் லாமா

இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.;

Update:2022-07-15 15:13 IST

Image Courtesy : PTI 

ஜம்மு,

திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் இருந்து புறப்பட்டார். நேற்று இரவு ஜம்முவில் தங்கி இருந்த அவர் இன்று லடாக் சென்றடைவார்.

அவருடைய இந்த இந்திய பயணம் சீனாவை எரிச்சலடையச் செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில், சமீபத்தில் தனது 87வது பிறந்தநாளை கொண்டாடிய தலாய் லாமாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியை, சீனா விமர்சித்தது.

சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட திபெத் தொடர்பான பிரச்சனைகளை இந்தியா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறி சீனா சமீபத்தில் விமர்சித்தது. இதற்கு பதிலடி கொடுத்த மத்திய வெளிவிவகார அமைச்சகம், தலாய் லாமாவை இந்தியாவில் விருந்தினராக நடத்துவது இந்திய அரசாங்கத்தின் நிலையான கொள்கை என்று கூறி சீனாவின் விமர்சனத்தை சாடி இருந்தது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா தங்கள் எல்லை பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தலாய் லாமா தெரிவித்துள்ளார். இது குறித்து தலாய் லாமா பேசுகையில், " இந்தியாவும் சீனாவும் போட்டி மற்றும் அண்டை நாடுகள். இரு நாடுகளும் விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளில் எல்லை பிரச்சனையை தீர்க்க வேண்டும். இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்