ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துள்ளானது.;

Update:2025-01-07 13:23 IST

அமராவதி,

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியான சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பதி, நர்சாபூர், கச்சிகுடா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் மிர்யாலகுடாவில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சரக்கு ரெயில் சிமென்ட் ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்