மகாத்மா காந்தியின் சனாதன தர்மத்தை அழிக்க இந்தியா கூட்டணி விரும்புகிறது - ஜோதிராதித்ய சிந்தியா

மகாத்மா காந்தியின் சனாதன தர்மத்தை அழிக்க இந்தியா கூட்டணி விரும்புகிறது என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

Update: 2023-09-17 17:48 GMT

இந்தியா கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் மத்தியபிரதேசத்தின் போபாலில் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்தியபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் முன்தினம் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்தியபிரதேசத்தின் குவாலியர் நகரில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜோதிராதித்ய சிந்தியா, "மகாத்மா காந்தியின் சனாதன தர்மத்தை அழிக்கவும், நாடு முழுவதும் ஊழலை பரப்பவும் எதிர்க்கட்சி கூட்டணி விரும்புகிறது. ஆனால் பரந்த அளவிலான மக்களின் கோபத்தை உணர்ந்து, இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்