இந்தியா-வங்காளதேசம் இடையே ரெயில்வே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-வங்காளதேசம் இடையிலான ரெயில்வே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Update: 2022-09-07 02:37 GMT

புதுடெல்லி,

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையிலான வர்த்தகம், இணைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அவரது இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ரெயில்வே, அறிவியல், விண்வெளி மற்றும் ஊடக ஒத்துழைப்பு ஆகியவற்றில் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்தியா-வங்காளதேசம் இடையிலான ரெயில்வே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. வங்காளதேசத்தின் ரெயில்வே ஊழியர்களுக்கு இந்திய ரெயில்வேயின் பயிற்சி மையங்களில் பயிற்சி அளிப்பது மற்றும் வங்காளதேச ரெயில்வே துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை ஒருங்கிணைப்பது ஆகிய இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்