உலக அளவில் முட்டை உற்பத்தியில் 3வது இடத்தில் இந்தியா!
உலக அளவில் முட்டை உற்பத்தியில் 3வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
புதுடெல்லி,
உலக அளவில் முட்டை உற்பத்தியில் 3வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட தரவுகளின் படி, நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 2020-21 காலகட்டத்தில் 12 ஆயிரத்து 211 கோடியாக(122.11 பில்லியன்) அதிகரித்துள்ளது.
1950-51 காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தி, 183 கோடியாக(1.83 பில்லியன்) இருந்த நிலையில், இப்பொது பன்மடங்கு உற்பத்தி அதிகரித்துள்ளது.
1950களில் ஓர் ஆண்டுக்கு ஒரு தனிநபருக்கு கிடைக்கும் முட்டைகள் எண்ணிக்கை 5 முட்டைகளாக இருந்த நிலையில், 2020-21ல் ஆண்டுக்கு 91 முட்டைகளாக அதிகரித்துள்ளது.
உலக அளவில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் சீனாவும்(38 சதவீதம்), அதனை தொடர்ந்து அமெரிக்காவும்(7 சதவீதம்) உள்ளன.