உத்தரகாண்ட்: கார்கள் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து.. 5 பேர் பலி

விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update:2024-06-16 22:30 IST

உத்தரகாண்ட்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு கார்கள் பள்ளத்தாக்குகளில் விழுந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதில், ஒரு விபத்து கிர்சு சௌபட்டா என்கிற பகுதியிலும், மற்றொன்று சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகேயும் நிகழ்ந்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில், சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகே கார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சத்புலிக்கு சென்று கொண்டிருந்தனன் என்பது தெரியவந்தது.

விபத்தில் படுகாயமடைந்தவர்களை மாநில பேரிடர் மீட்புப் படையுடன் சேர்ந்து போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்