சிக்கமகளூரு மாவட்டத்தில் இரு விபத்துகளில் விவசாயி, வாலிபர் பரிதாப சாவு

சிக்கமகளூரு மாவட்டத்தில் இரு விபத்துகளில் விவசாயி, வாலிபர் பரிதாப உயிரிழந்தனர்.

Update: 2022-10-29 18:45 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா செட்டி கொப்பா பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவரது நண்பர் மால்தேஷ் (30). இவர்கள் இருவரும் வேலை விஷயமாக அதே பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதில் வினோத் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் மோட்டாா் சைக்கிள் திடீரென வினோத்தின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி உள்ளது. அப்போது வினோத் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி ெகாண்டிருந்தனர். இந்த நிலையில் வினோத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து என்.ஆர்.புரா ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரா (40). விவசாயியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டாா் சைக்கிள் தேவேந்திராவின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்