ரெயில் பெட்டியில் ஒருவர் வெட்டிக்கொலை
ரெயில் பெட்டியில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் சித்தாரோடா ரெயில் நிைலயம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ரெயில் நிலையத்தின் 4-வது தளத்தில் நின்ற ரெயிலின் ஒரு பெட்டியில் ரத்தவெள்ளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த நபர், மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் கொலையான நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் அவரை கொன்ற மர்மநபர்கள் யார், என்ன காரணத்திற்காக கொன்றனர் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து உப்பள்ளி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.