கர்நாடகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 5 மடங்கு அதிகரிப்பு

கர்நாடகத்தில் கடந்த ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

Update: 2022-11-13 20:45 GMT

பெங்களூரு:கர்நாடகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய குற்றப்பிரிவு அமைச்சகம் சார்பில் கர்நாடகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில் நடைபெற்ற குற்றங்களில், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அதிகரித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் 1,353 வழக்குகள் பதிவானது. கடந்த 2021-ம் ஆண்டில் 7,261 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குழந்தை கடத்தல் தொடர்பாக 2,500 வழக்குகள் பதிவானது. கடந்த 2012-ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் வழக்குகள் பதிவாகின.

இதுகுறித்து பெங்களூரு நகர துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா கூறுகையில், கர்நாடக கோர்ட்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக தொடரப்பட்ட 13 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கடந்த 2021-ம் ஆண்டில் 4,673 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. ஒட்டுமொத்த வழக்குகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளுக்கு விசாரணையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்