பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில்

ெபங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-27 18:45 GMT

பெங்களூரு:

மனைவி, கள்ளக்காதலன் கைது

பெங்களூரு எலகங்கா அருகே கொன்டப்பா லே-அவுட்டில் வசித்து வநதவர் சந்திரசேகர் (வயது 34). இவரது மனைவி ஸ்வேதா (21). இந்த நிலையில், கடந்த 21-ந் தேதி சந்திரசேகர் தனது வீட்டின் 3-வது மாடியில் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அவரது உறவினர், எலகங்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்ததும் எலகங்கா போலீசார் விரைந்து சென்று சந்திரசேகர் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது 3-வது மாடியின் பால்கனியில் வைத்து சந்திரசேகரை ஆயுதங்களால் தாக்கி மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சந்திரசேகரை கொலை செய்ததாக, அவரது மனைவி ஸ்வேதா, இவருடைய கள்ளக்காதலான ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் (25) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கள்ளத்தொடர்புக்கு இடையூறு

அதாவது சந்திரசேகரை திருமணம் செய்யும் முன்பாகவே சுரேசை ஸ்வேதா காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்யவும் முடிவு செய்திருந்தார்கள். இதற்கிடையில், ஸ்வேதாவின் மாமாவான சந்திரசேகரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தார்கள். பெற்றோர் கூறியதால் வேறு வழியின்றி சந்திரசேகரை ஸ்வேதா திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பின்பும் சுரேசும், ஸ்வேதாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இவர்களது கள்ளத்தொடர்புக்கு சந்திரசேகர் இடையூறாக இருந்துள்ளார். சந்திரசேகர் உயிருடன் இருந்தால், கள்ளத்தொடர்பை தொடர முடியாத என 2 பேரும் நினைத்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 21-ந் தேதி ஆயுதங்களால் தாக்கி சந்திரசேகரை சுரேஷ் கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக ஸ்வேதா இருந்துள்ளார். கைதான 2 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்