பெண் தற்கொலை வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

பெண் தற்கொலை வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-20 22:35 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மல்லையா. இவரது மனைவி லட்சுமி. இந்த நிலையில் குடிபோதையில் மல்லையா தினமும் தொல்லை கொடுத்ததால் மனம் உடைந்த லட்சுமி கடந்த 2008-ம் ஆண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். இந்த நிலையில் லட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மல்லையாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மங்களூரு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் மல்லையாவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஆனால் இதனை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனக்கு எதிராக சாட்சியம் கூறிய 5 பேரும் எனது மனைவியின் உறவினர்கள். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர் என்று கூறி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஹரீஷ்குமார் முன்பு நடந்து வந்தது. மனுவின் இறுதி விசாரணையின் போது நீதிபதி கூறுகையில், தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை தான் அதிகபட்சம். அதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டியது இல்லை என்று கூறிய நீதிபதி மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்