சிவமொக்காவில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

சிவமொக்காவில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் தொல்லை கொடுத்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-07-15 00:15 IST

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சாகர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பவ்யா (வயது19). இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். பவ்யா இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில், ஆண் நண்பரிடம் அவர் பேசி வந்ததாக கூறப்படுகிறது. பவ்யா கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசமால் இருந்துள்ளார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாகர் போலீசில் பவ்யாவின் சகோதரர் புகார் அளித்தார். அதில், பவ்யா இறந்ததற்கு சொரப் தாலுகா உரளிகொப்பா கிராமத்தை சேர்ந்த பிரதீப் தான் காரணம் என கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் பிரவீனை தேடி வந்தனர். இந்தநிலையில் உரளிகொப்பா பகுதியில் பதுங்கி இருந்த பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், பிரதீப் இன்ஸ்டாகிராம் மூலம் பவ்யாவிடம் பேசி பழகி வந்துள்ளார். மேலும் அவர் பவ்யாவை, இன்ஸ்டாகிராம் மூலம் காதல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சாகர் போலீசார் பிரதீப்விடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்