சிவமொக்காவில், தசரா விளையாட்டு போட்டிகள்; ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
சிவமொக்காவில் நடைபெற்ற தசரா விளையாட்டு போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சிவமொக்கா;
கர்நாடகத்தில் நடைபெறும் மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. மைசூரு தசரா விழாவையொட்டி சிவமொக்கா, மண்டியா, சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களிலும் நவராத்திரி விழா மற்றும் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டும் சிவமொக்காவில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று சிவமொக்கா மாநகராட்சி சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
கராத்தே, ஸ்கேட்டிங் போட்டி, பெண்கள் தசரா உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. இதில் சிவமொக்கா டவுன் கோபால்கவுடா விரிவாக்கம் பகுதியில் நடந்த ஸ்கேட்டிங் போட்டிகளை முன்னாள் மந்திரி ஈசுவரப்பா விசில் அடித்து தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.