சிக்கிமில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற காங்கிரஸ்

சிக்கிமில் 12 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி நோட்டாவுக்கு குறைவாக வாக்குகளை பெற்றுள்ளது, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

Update: 2024-06-02 13:03 GMT

காங்டோக்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 32 இடங்களில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு(எஸ்டிஎப்) ஒரு இடம் தான் கிடைத்துள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

அதேவேளையில், சிக்கிமில் காங்கிரஸ் கட்சியை விட நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 0.32 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், நோட்டாவிற்கு 0.99%- கிடைத்துள்ளது. நோட்டாவிற்கும் கீழ் காங்கிரஸ் கட்சி சென்றது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் கட்சிக்கு 58.38 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. எஸ்டிஎப் கட்சிக்கு 27.37 சதவீதமும் பா.ஜனதாவிற்கு 5.18 சதவீதமும், நோட்டாவுக்கு 0.99 சதவீதமும், காங்கிரசுக்கு 0.32 சதவீதமும் மற்றவர்கள் 7.77 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளனர். சிக்கிமில் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்