நவலகுந்துவில் உணவு தானியங்கள் திருடிய 3 பேர் கைது

நவலகுந்துவில் உணவு தானியங்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-07-01 00:15 IST

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுன் ராமலிங்கேஸ்வரா நகரை சேர்ந்தவர் லிங்கராஜ கவுடா. இவர் தனது ேதாட்டத்து வீட்டில் 80 மூட்டைகளில் மக்கா சோளம், பச்சை பயிறு, கடலை, சோயா பின்ஸ் ஆகியவற்றை சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தோட்டத்து வீட்டில் புகுந்த மர்மநபர்கள், உணவு தானிய பொருட்கள் இருந்த மூட்டைகளை திருடி சென்றுவிட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து லிங்கராஜகவுடா, நவலகுந்து டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், உணவு தானியங்களை திருடியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நவலகுந்துவை சேர்ந்த கிரண் கும்பார், அன்னிகேரியை சேர்ந்த கிருஷ்ணா, உப்பள்ளியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான உணவு தானியங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்