தேசிய அளவில் ஜனதா தளம்(எஸ்)-டி.ஆர்.எஸ். இணைந்து செயல்பட ஆலோசனை; குமாரசாமி தகவல்
நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள நிலைகள் குறித்து அவர்கள் 2 பேரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவை சந்தித்த பிறகு ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமராசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் இன்று தெலுங்கானா அரசு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.டி.ராமாராவை ஐதராபாத்தில் நேரில் சந்தித்து பேசினேன். கர்நாடகம்-தெலுங்கானா தொடர்பான விவகாரங்கள் மற்றும் தேசிய அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசினேன். அவர் எனக்கு வழங்கிய உபசரிப்பை கண்டு ஆச்சரியப்பட்டேன். அதைத்தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவை சந்தித்து பேசினேன். அவருடன் அரசியில் நிலவரம் குறித்து விரிவாக பேசினேன். இந்த பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் இருந்தது.
நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள நிலைகள் குறித்து அவர்கள் 2 பேரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். தேசிய அளவில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக மரிநல கட்சிகள் ஒருங்கிணந்து மாற்று அணியை உருவாக்குவது குறித்து நாங்கள் பேசினோம். தேசிய அளவில் ஜனதா தளம்(எஸ்) மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சிகள் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தோம்.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.