இமாசலபிரதேசத்தில் ரஷிய பெண்ணை கற்பழித்த சிங்கப்பூர் சுற்றுலாப்பயணி கைது
இமாசலபிரதேசத்தில் ரஷிய பெண்ணை கற்பழித்த சிங்கப்பூர் சுற்றுலாப்பயணியை போலீசார் கைது செய்தனர்.
சிம்லா,
இமாசலபிரதேச மாநிலத்தின் குளு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா நகரம் மணாலி. இங்கு ஒரு 38 வயது ரஷிய பெண், தனது தாயுடன் ஒரு வாடகை அறையில் சிறிது காலமாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அங்கு சுற்றுலா வந்த அலெக்சாண்டர் லீ ஜியா ஜுன் என்ற சிங்கப்பூர் வாலிபருடன் சில நாட்களுக்கு முன் அந்த ரஷிய பெண் அறிமுகமானார். அவரை, தான் தங்கியுள்ள ஓட்டல் அறைக்கு வருமாறு நட்புரீதியாக சிங்கப்பூர் வாலிபர் அழைத்துள்ளார். அங்கு சென்ற அப்பெண்ணை அந்த வாலிபர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரஷிய பெண்ணின் புகாரின் பேரில் மணாலி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிங்கப்பூர் வாலிபரை கைது செய்தனர்.