உப்பள்ளியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
உப்பள்ளியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உப்பள்ளி-
உப்பள்ளியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ்காரர் தற்கொலை
பெலகாவி அருகே சங்கொள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ருத்ராப்பூர், போலீஸ்காரர். இவர், தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுனில் உள்ள பெண்டிகேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். மேலும் மல்லிகார்ஜுனா, பெண்டிகேரி தொட்டமணி காலனியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெண்டிகேரி பகுதியில் தான் தங்கி இருந்த வீட்டில் மல்லிகார்ஜுனா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீஸ் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெண்டிகேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட மல்லிகார்ஜுனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மல்லிகார்ஜுனாவின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மேலும் மல்லிகார்ஜுனாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து பெண்டிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.