சிறுத்தை தாக்கியதில் 5 கன்றுக்குட்டிகள் செத்தன
சிறுத்தை தாக்கியதில் 5 கன்றுக்குட்டிகள் செத்தன
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா மனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் ஒரு சிறுத்தை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயி, வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்தில் தனது மாடுகள், கன்றுக்குட்டிகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, 5 கன்றுக்குட்டிகள் மீது பாய்ந்து தாக்கியது. அதில் 5 கன்றுக்குட்டிகளும் பரிதாபமாக செத்தன. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.