விராஜ்பேட்டை புரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3¼ கோடியில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்

விராஜ்பேட்டை புரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3¼ கோடியில் வளர்ச்சி பணிகளை கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-05 19:00 GMT

குடகு;


குடகு மாவட்டம் விராஜ்பேட்டை புரசபைக்கு உட்பட்ட விஜயநகர் உள்ளிட்ட வார்டுகளில் சாலை சீரமைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டது. இந்த பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கினார். பின்னர் அவர் ரூ.3.28 கோடியில் சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர் வசதி உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விராஜ்பேட்டையில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. சாலை புனரமைப்பு, சாக்கடை கால்வாய் பணிகள், குடிநீர் வசதி உள்பட ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அரசு நிதியை சரியாக பயன்படுத்தி வளர்ச்சி பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் இன்னும் ஒரு மாதத்தில் இந்த வளர்ச்சி பணிகளை முடித்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்