கார் மோதிய விபத்தில் வாலிபர் சாவு

மணிப்பால் அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் உயரிழந்தார்.

Update: 2022-10-10 19:00 GMT

 மங்களூரு;


உடுப்பி மாவட்டம் மணிப்பால் டவுன் பகுதியை ேசா்ந்தவர் ஷாஹின். இவர் நேற்றுமுன்தினம் தனது நண்பர்களான ஆரிப், லத்திபுல் சவுத்ரி, சுகதேவ், சுமித் ஜஸ்வால் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள சென்டிரல் பாா்க் ஓட்டல் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் நடந்து சென்று ெகாண்டிருந்த ஷாஹின் உள்பட 4 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஷாஹின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்