வட மாநிலங்களில் பனியின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வட மாநிலங்களில் மூடு பனி நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-27 06:15 GMT

டெல்லி,

நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. குறிப்பாக, டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பனியின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 31-ம் தேதி வரை மூடு பனியின் தாக்கம் நீடிக்கும் என்றும் மத்தியப்பிரதேசம், மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பனியின் தாக்கம் குறைந்த அளவில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம் மிகவும் அதிக அளவில் அடர்ந்து காணப்படுவதால் டெல்லிக்கு "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்