என்னுடைய சகோதரி ஜனாதிபதியானதில் அதிக மகிழ்ச்சி: திரவுபதி முர்முவின் சகோதரர்

என்னுடைய சகோதரி, ஒரு பழங்குடியின பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன் என திரவுபதி முர்முவின் சகோதரர் தாரிணிசென் டுடு கூறியுள்ளார்.

Update: 2022-07-21 17:23 GMT



புவனேஸ்வர்,



இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த 18ந்தேதி நடந்து முடிந்தது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு தேவையான வாக்குகளை திரவுபதி முர்மு கடந்துள்ளார். இதன் மூலம், நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில், திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவும் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் சகோதரர் தாரிணிசென் டுடு ஒடிசாவில் இருந்து கூறும்போது, என்னுடைய சகோதரி, ஒரு பழங்குடியின பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தை பருவத்தில் இருந்தே அவர் வாழ்வில் அதிகம் போராடி இருக்கிறார். இது ஒவ்வொருவருக்கும் ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்