சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகரின் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-24 11:23 GMT

புதுடெல்லி,

ரெலிகோ் புரொமோட்டா் நிறுவனத்தின் மால்விந்தா் சிங்கின் மனைவியிடம், சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் மத்திய உள்துறை மற்றும் சட்டத் துறையின் செயலாளர்கள் என ஏமாற்றி, ரூ.4 கோடியை மோசடி செய்து பெற்றது தொடா்பாக டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவில் கடந்த 2021 செப்டம்பரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை வழக்குத் தொடா்பாக அமலாக்கத் துறையினா் கைது செய்தனர். இதையடுத்து, சுகேஷை 9 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், 9 நாள்கள் காவல் இன்று முடிவடைந்த நிலையில், தீபக் ராம்தானி மற்றும் பிற சிறை அதிகாரிகளுக்கு செலுத்தப்பட்ட பணம் குறித்த விவரங்களைச் சேகரிக்க கால அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் கூறினர். இதையடுத்து, சுகேஷின் காவல் மீண்டும் மூன்று நாள்களுக்கு நீடித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்