ஆந்திராவில் ரூ.5.47 கோடி மதிப்பிலான மதுபானம் பறிமுதல்; 2.43 லட்சம் மதுபாட்டில்களை புல்டோசர் மூலம் அழித்த போலீசார்!
ஆந்திரப் பிரதேசத்தில் 2.43 லட்சம் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன.;
விஜயவாடா,
ஆந்திரப் பிரதேசத்தில் 2.43 லட்சம் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன. பிற மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நகரின் புறநகர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.அப்போது தெலுங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டில்களை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர்.
இந்த மதுபானங்களின் மொத்த மதிப்பு ரூ.5.47 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நந்திகம என்ற இடத்தில் போலீசார் முன்னிலையில் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
சாலையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன. இதுவரை 2,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்து 226 வழக்குகளை பதிவு செய்துள்ளோம் என்று விஜயவாடா காவல்துறை ஆணையர் காந்தி ராணா டாடா தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிறப்பு அமலாக்கப் பணியகம், கர்னூலில் இருந்து கிட்டத்தட்ட ரூ.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 66,000 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.