ஊழல்களை ஆதாரத்துடன் பங்கிரப்படுத்துவேன் -முன்னாள் தலைவர் கே.சி.முரளி பேட்டி

கோலார் தங்கவயல் நகரசபையில் நடைபெறும் ஊழல்களை ஆதாரத்துடன் பங்கிரங்கப்படுத்துவேன் என்று முன்னாள் தலைவர் கே.சி முரளி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-06 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் நேற்று நகரசபை முன்னாள் தலைவர் கே.சி.முரளி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்பேத்கர் பவன், அம்பேத்கர் சிலை சி.எம்.ஆறுமுகம் சிலை மற்றும் அவரது சமாதி உள்ளிட்டவற்றை அகற்ற நான்(கே.சி.முரளி) நடவடிக்கை எடுக்கவில்லை என்று நகரசபை தற்போதைய தலைவர் வள்ளல் முனிசாமி குற்றம்சாட்டுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தான் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிலைகளை அகற்றுவது குறித்த தீர்ப்பு வந்தபின் கோலார் தங்கவயலில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களை ஒன்று சேர்த்து முற்போக்கு கூட்டணி என்று நாங்கள் தொடங்கி வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இந்த பிரச்சினைக்கு முடிவு தெரியும் வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நகரசபையில் ஏராளமான ஊழல்கள் நடந்து வருகிறது. அதை ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்