சட்டசபை தேர்தலில் எனது பலவீனத்தால் நான் தோற்றேன் சி.டி.ரவி பேட்டி

சட்டசபை தேர்தலில் எனது பலவீனத்தால் நான் தோற்றேன் என சி.டி.ரவி கூறினார்.

Update: 2023-09-16 18:45 GMT

மங்களூரு-

முன்னாள் மந்திரி சி.டி.ரவி நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகின்றன. இந்த அரசு ஆரம்பத்திலேயே தவறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநிலத்தில் போதிய மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவுகிறது. ஆனால் மாநில அரசு இன்னும் வறட்சி பகுதிகளை அறிவிக்காமல் உள்ளது. காங்கிரஸ் வந்தாலே மாநிலத்தில் வறட்சி ஏற்பட்டு விடுகிறது. இது தற்செயலாக நடக்கிறதா அல்லது அவர்கள் விதியா என தெரியவில்லை.

கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவியது. பா.ஜனதா ஆட்சியில் நல்ல மழை பெய்து, மக்கள் சந்தோஷமாக இருந்தனர். தலித் பெண் மீது தாக்கிய வழக்கில் மந்திரி டி.சுதாகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பா.ஜனதாவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு நானே காரணம். வேறு யாரும் இல்லை. எனது பலவீனத்தால் தான் நான் தோற்றேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்