சர்வதேச புலிகள் தினம்: புலிகளை பாதுகாக்க உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள் - பிரதமர் மோடி

புலியை பாதுகாக்க தீவிரமாக உழைக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2022-07-29 15:50 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

சர்வதேச புலிகள் தினம் இன்று (ஜூலை 29) அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய அமைப்பை ஊக்குவிப்பது மற்றும் புலி பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில், புலியை பாதுகாக்க தீவிரமாக உழைக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சர்வதேச புலிகள் தினத்தில், புலியை பாதுகாக்க தீவிரமாக உழைக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். 75,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட 52 புலிகள் காப்பகங்களை இந்தியா கொண்டுள்ளது என்பது உங்களைப் பெருமைப்படுத்தும். புலிகள் பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்த புதுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்