டீ போட்டுத் தராததால் ஆத்திரம்: மருமகளை கழுத்தை நெரித்து கொன்ற மாமியார்

டீ போட்டு தராததால் ஆத்திரத்தில் மருமகளை மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-28 02:58 GMT

கோப்புப்படம் 

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டீ போட்டு தராததால் ஆத்திரத்தில் மருமகளை மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பர்சானா. இவரது மருமகள் அஜ்மிரி பேகம் (28 வயது). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மாமியார், மருமகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் பர்சானா டீ போட்டு தரும்படி மருமகளிடம் கூறியுள்ளார். இதற்கு பேகம் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த பர்சானா துணியால் தனது மருமகளை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஜ்மிரி பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பர்சானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்