குஜராத்: தனக்கு பாடம் கற்பித்த பள்ளி ஆசிரியரை சந்தித்த பிரதமர் மோடி

ஒரு நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நவ்சாரி நகரில் தனது முன்னாள் பள்ளி ஆசிரியரை இன்று சந்தித்தார்.

Update: 2022-06-10 15:55 GMT

image tweeted by @ashoswai

நவ்சாரி,

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று குஜராத் சென்றார். நீராலி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறப்பதற்காக வந்த பிரதமர் மோடி, நவ்சாரி நகரைச் சேர்ந்த தனது முன்னாள் ஆசிரியர் ஜெகதீஷ் நாயக்குடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

தற்போது தபி மாவட்டத்தில் உள்ள வியாராவில் பிரதமரின் முன்னாள் ஆசிரியரான ஜெகதீஷ் நாயக் (88) வசித்து வருகிறார். பிரதமர் மோடி தனது குடும்பத்துடன் மெஹ்சானா மாவட்டத்தின் வாட் நகரில் வசித்தபோது அவருக்கு ஜெகதீஷ் நாயக் பாடம் கற்பித்துள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் மோடியும், அவரின் முன்னாள் ஆசிரியரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து ஜெகதீஷ் நாயக் கூறும்போது, "இது ஒரு குறுகிய சந்திப்பு என்றாலும், நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இத்தனை ஆண்டுகளாக என் மீதான அவரது மரியாதை மற்றும் உணர்வுகள் மாறவில்லை" என்று நாயக் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்