தனக்கு தகுதி இல்லாத பெரிய பங்களாவை அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி பெற்றார்? - பா.ஜனதா கேள்வி

தனக்கு தகுதி இல்லாத பெரிய பங்களாவை அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி பெற்றார் என்று பா.ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2023-06-20 20:56 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சச்தேவா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

டெல்லி, யூனியன் பிரதேசமாக இருப்பதால், அதன் முதல்-மந்திரிக்கு டைப்-7 ரக பங்களா பெறவே தகுதி உள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் இதைத்தான் தெரிவிக்கின்றன.

ஆனால், தனக்கு தகுதி இல்லாத மிகப்ெபரிய பங்களாவை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி பெற்றார் என்பதை டெல்லி அரசு தெரிவிக்க வேண்டும்.

முறையான டெண்டரோ, நிதிஒதுக்கீடோ இல்லாமல், முதல்-மந்திரி பங்களாவை புதுப்பிக்க பொதுப்பணித்துறையை கேட்டுக்கொண்டது யார்? முதலில் புதுப்பிக்க திட்டமிட்ட பொதுப்பணித்துறை, இறுதியாக புதிய பங்களாவையே கட்டி விட்டது. அதற்கு கட்டுமான திட்ட அனுமதியும் பெறவில்லை.

முதல்-மந்திரியின் விருப்பத்துக்கு ஏற்ப வரைபடத்தை மாற்றியதால்தான் செலவு அதிகரித்ததாக பொதுப்பணித்துறை கூறியுள்ளது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்