காஷ்மீரில் ஏழுமலையான் கோவிலை திறந்துவைத்தார் உள்துறை மந்திரி அமித் ஷா
ஜம்முவின் சித்ரா பகுதியில் 62 ஏக்கர் நிலத்தில் 25 கோடி மதிப்பீட்டில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
ஜம்மு,
நாடு முழுவதும் இந்து தர்ம பிரச்சாரம் என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஏழுமலையான் கோயில்களை கட்டும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, ஜம்முவின் சித்ரா பகுதியில் 62 ஏக்கர் நிலத்தில் 25 கோடி மதிப்பீட்டில் ஏழுமலையான்கோவில் கட்டப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா திறந்துவைத்தார்.