ஆலப்புழை அருகே வீட்டில் பதுக்கிய நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

ஆலப்புழை அருகே வீட்டில் பதுக்கிய நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 2 பேர் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

Update: 2022-06-05 03:18 GMT

ஆலப்புழை:

ஆலப்புழை மாவட்டம் இரவுக்காடு பைபாஸ் சாலை அருகே உள்ள ஒரு வீட்டில் இரவு நேரங்களில் மட்டும் ஆட்கள் நடமாட்டம் காணப்படுவதாகவும், அங்கு பயங்கர ஆயுதங்கள் கொண்டு வந்து பதுக்கி வைக்கப்படுவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயதேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த வீட்டில் சோதனை நடத்த சிறப்பு பிரிவு போலீசாருக்கு, அவர் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் சிறப்பு பிரிவு போலீசார், அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து நடந்த சோதனையில், நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அதை தயாரிக்க பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டது. மேலும் அரிவாள், கத்தி, கடப்பாரை போன்ற ஆயுதங்களும் இருந்தது.

இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 2 பேரையும் கைது செய்து, அவர்கள் யார்?, எந்த அசம்பாவித சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டு இருந்தனர்?, தப்பி ஓடியது யார்?, அந்த திட்டத்துக்கு மூளையாக செயல்படுவது யார்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்