"நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படவுள்ளன"- பிரதமர் மோடி

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.

Update: 2023-09-18 05:19 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசுகிறார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"விநாயகர் சதுர்த்தி தினத்தன்று புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு இடம் பெயர்கிறோம். பழைய வருத்தங்கள், புகார்களை புறந்தள்ளி உற்சாகத்துடன் புதிய நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும்.

நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது. இந்தியாவின் மூவர்ண கொடி நிலவிலும் பறக்கிறது. சில நாட்கள் மட்டுமே நடைபெற்றாலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டத்தொடரை உற்சாகமாக நடத்தி அனைவரும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை தர வேண்டும்.

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும். இந்த கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படவுள்ளன." இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்