ஹிண்டன்பர்க் விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்

செபி தலைவரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத் வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Update: 2024-08-13 10:02 GMT

புதுடெல்லி,

அதானி குழுமம் மீது கடந்த ஆண்டு பங்குச்சந்தை முறைகேடு புகார் தெரிவித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், தற்போது 'செபி' தலைவர் மாதபி புச் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது. அதாவது அதானி குழும நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களில் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக கூறியிருக்கிறது.

இந்த விவகாரம் இந்திய அரசியல் வட்டாரத்தில் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த புகார்கள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசை காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், செபி தலைவரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத் வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மாநில தலைநகரங்களில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெறும் என்று என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்