பட்டாசு வெடி விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை-குமாரசாமி வலியுறுத்தல்
பட்டாசு வெடி விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணை நடத்தவேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.;
பெங்களூரு:-
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். 14 பேர் பலியாகி இருப்பது பற்றி கேள்விப்பட்டதும் மிகுந்த வேதனை அடைந்தேன்.
அங்கு வேலை செய்த 14 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகி உள்ளனர். இது எனது மனதை மிகவும் பாதித்து விட்டது. பட்டாசு விபத்தில் பலியான 14 பேரின் குடும்பத்தினரும், இந்த துயரத்தை தாங்கி கொள்ளும் சக்தியை கடவுள், அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.
பட்டாசு விபத்தில் பலியான 14 பேரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக அரசு இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பட்டாசு குடோன், கடைகளில் பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும். பட்டாசு விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.