ஏழை மாணவரின் கல்லூரி படிப்புக்காக உதவிய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்

உப்பள்ளியில் ஏழை மாணவரின் கல்லூரி படிப்புக்காக உதவி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு பாராட்டுகள் குவிகிறது.

Update: 2023-06-11 18:45 GMT

Instagram : klrahul

பெங்களூரு:-

கர்நாடக மாநிலம் உப்பள்ளி அருகே மகாலிங்கபுராவை சேர்ந்த மாணவர் அம்ருத் மாவினகட்டே(வயது 17). இவர், பி.யூ.சி. தேர்வில் 600-க்கு 571 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த அம்ருத், உப்பள்ளியில் ஒரு கல்லூரியில் பி.காம் படிக்க விரும்பினார். அங்கு கட்டணம் அதிகமாக இருந்ததால், அம்ருத்தால் கல்லூரி படிப்பை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி நிதின் என்பவருக்கு தெரிந்ததும் உப்பள்ளியில் ஒரு தனியார் கல்லூரியில் அம்ருத்தை சேர்க்க அழைத்து சென்றார். கல்லூரி நிர்வாகம் ரு.85 ஆயிரம் கட்டணம் கேட்டது. அம்ருத் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், ரூ.10 ஆயிரத்தை மட்டும் குறைத்துவிட்டு ரூ.75 ஆயிரம் செலுத்தும்படி தெரிவித்திருந்தது.

இதனால் மாணவருக்கு கட்டணம் செலுத்தும் விவகாரம் குறித்து நிதின், மஞ்சுநாத் என்பவரிடம் கூறியுள்ளார். மஞ்சுநாத் தன்னுடைய நண்பரான அக்சயிடம் கூறியுள்ளார். அகசய் இந்த தகவலை இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கர்நாடகத்தை சேர்ந்தவருமான கே.எல்.ராகுலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதுபற்றி கேள்விப்பட்ட கே.எல்.ராகுல், ஏழ்மை காரணமாக மாணவர் அம்ருத்தின் கல்லுரி படிப்பு பாதிக்கப்படக் கூடாது, அந்த மாணவருக்கான கல்லூரி படிப்பு செலவை தானே கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் மாணவர் அம்ருத்தின் கல்லூரி படிப்புக்கு தேவையான முழு கட்டணத்தையும், அவரது வங்கி கணக்குக்கு கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் அனுப்பி வைத்துள்ளதாக அக்சய் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்