கா்நாடகத்தில் இன்னும் 10 நாட்களுக்கு கடும் பனி நிலவும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
கா்நாடகத்தில் இன்னும் 10 நாட்களுக்கு கடும் பனி நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கடும் குளிர்
கர்நாடகத்தில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் தொடக்கம் வரை கடும் குளிர் நிலவும். பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் குளிர் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் கர்நாடகத்தில் பனிப்பொழிவு தொடங்கியது. இதனால் மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல்ேவறு பகுதிகளில் கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
ஆனால் ஜனவரி முதல் வாரம் முடிந்தும் மாநிலத்தில் பனிப்பொழிவு குறையவில்லை. கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறை பனியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
10 நாட்கள்...
மக்கள் ெவளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். ஸ்வெட்டர் உள்ளிட்ட கவச உடைகளை அணிந்து தான் ெவளியே வர முடிகிறது. பகலில் நன்கு ெவயில் அடித்தாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் குளிர் நிலவுகிறது. இதனால் ெபரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் 10 நாட்களுக்கு குடும் குளிர் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மூடுபனி
கடந்த ஆண்ைட விட கா்நாடகத்தில் இந்த ஆண்டு அதிகளவு குளிர் நிலவுகிறது. மாநிலத்தில் இன்னும் 10 நாட்கள் கடும் குளிர் நிலவும். பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200 மீட்டர் வரை கடும் மூடுபனி இருக்கும். 800 மீட்டர் முதல் 500 மீட்டர் வரையும், 500 மீட்டர் முதல் 200 மீட்டர் வரையும் மூடுபனி இருந்தால் மிதமான குளிர் இருக்கும். 200 மீட்டருக்கு குறைவாக மூடுபனி நிலவினால் அடர்ந்த மூடுபனி என்றும் கடும் குளிர் நிலவும் என்றும் அழைக்கிறோம். இதனால் இன்னும் 10 நாட்களுக்கு ெபங்களூருவில் அடர்ந்த மூடுபனி நிலவும். மூடுபனியால் சிலருக்கு மூக்கில் ரத்தம் வருதல், தோல் வறட்சி, தோல் அரிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.