கேரளாவில் கனமழை : 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது

Update: 2022-08-10 06:10 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது.

ஒடிசா கடற்கரை அருகே புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை (11-ந் தேதி) வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கன மழையின் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. . கடல் பகுதியில் பலத்த காற்று வீசும். இதனால் அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்