இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 22-ஆக உயர்வு

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-08-21 05:47 GMT

Image Courtacy: ANI


காங்கரா,

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக கனமழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக அங்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை வெள்ள பாதிப்பும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரெயில்வே பாலம் ஒன்று நேற்று உடைந்து விழுந்தது.

மாநிலத்தின் கங்கரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 பேர் உயிர்ந்துள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கிய 6 பேரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்