கர்நாடகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

நீரில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் வாடகை கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-22 20:51 GMT

பெங்களூரு:-

இளம்பெண் சாவு

பெங்களூருவில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில் கே.ஆர். சர்க்கிளில் உள்ள சுரங்க சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கார் மழைநீரில் சிக்கியது.

அதில் பயணித்த பெங்களூருவில் பணியாற்றி வரும் விஜயவாடாவை சேர்ந்த பானு ரேகா என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவுக்கு அறிவியலுக்கு மாறான சுரங்க சாலையே காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் பானுரேகாவின் சகோதரர் சந்தீப், அல்சூர் கேட் போலீசில் புகார் அளித்தார்.

டிரைவர் கைது

அந்த புகாரில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய செயல்பாடே உயிரிழப்புக்கு காரணம் என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் கே.ஆர். சர்க்கிள் விவகாரம் தொடர்பாக வாடகை கார் டிரைவர் ஹரீசை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், சிக்னலில் நின்றபோது காரில் இருந்தவர்கள் சுரங்க சாலை வழியாக சென்றுவிடலாம் என கூறியதாகவும், இதனால் தான் சுரங்க சாலையில் சென்றபோது, கார் தண்ணீரில் மூழ்கியதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்