கேரளாவில் வரும் 7-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-03 21:56 GMT

திருவனந்தபுரம்,

வடகிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் வரும் செப்டம்பர் 7-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழை காரணமாக இன்றைய தினம் ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் படகு சாவாரிகள் மேற்கொள்ளவும், கடற்கரைக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்