உத்தரகாண்டில் திடீர் மேகவெடிப்பால் கனமழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வீடுகள்..!

உத்தரகாண்டில் கடும் வெள்ளப்பெருக்கால், ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

Update: 2022-09-11 06:22 GMT

உத்தரகாண்ட்,

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் தார்சுலா நகரில் மேகவெடிப்பால் திடீர் கனமழை பெய்த‌து. இதனால் காலி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் பாய்ந்து ஓடியது.

அப்போது, கரையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டதால் அங்கு இருந்த வீடுகள், இடிந்து ஆற்றில் விழுந்தன. வீடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்